தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அய்யா வைகுண்டரின் பிறந்தநாள்: மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை! - Ayya ​​Vaikundar's birthday

திருநெல்வேலி: அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டரின் பிறந்த நாள்  திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 4 ஆம் உள்ளூர் விடுமுறை  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  District Collector Vishnu  Ayya ​​Vaikundar's birthday  collector vishnu announcement march 4 is a local holiday in thirunelveli-district
Collector Vishnu

By

Published : Feb 25, 2021, 8:57 AM IST

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்து கடவுள்களில் ஒன்றான அய்யா வைகுண்டரின் வழிபாடு புகழ்பெற்றதாகும். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

எனவே அன்றைய தினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், மார்ச் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள், முக்கியத் தேர்வுகள் இருப்பின் அந்தப் பணிகள் பாதிக்காத வகையில் இந்த உள்ளூர் விடுமுறை அமல்படுத்தப்படும். அன்றைய தினம் தேர்வு இருந்தால் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நெல்லையில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்: ஆட்சியர் விஷ்ணு!

ABOUT THE AUTHOR

...view details