தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகலாம்"- சபாநாயகர் அப்பாவு கொடுத்த ஹாட் நியூஸ்! - சபாநாயகர் அப்பாவு ஹாட் நியூஸ்

Speaker Appavu: திருநெல்வேலி மாவட்டத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டும் பணியினை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் அல்லது அவர் சுட்டிக்காட்டும் நபர் பிரதமர் ஆகலாம் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 11:53 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவிப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் 605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஐந்தாம் கட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா ராதாபுரம் அருகே சிதம்பரபுரத்தில் நடைபெற்றது. ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டும் பணியினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு கூடியிருந்த பெண்களிடையே பேசும்போது, "இன்னும் ஏழு தினங்களில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வீடு வந்து சேரும். யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தற்போது மத்திய அரசு நிதியை குறைத்துள்ளதால், தமிழக முதல்வர் மிகுந்த சிரமத்துடன் பணம் வழங்கி வருகின்றார்.

இதையும் படிங்க:"அரைகுறை பணிக்கு ரூபாய் ஒரு கோடியா?" - தென்காசி ஆய்வில் உறுதிமொழி குழு பகீர் கேள்வி!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகலாம் அல்லது அவர் சுட்டிக் காட்டுபவர் பிரதமர் ஆகலாம். அப்படி முதலமைச்சர் ஸ்டாலின் அல்லது அவர் சுட்டிக்காட்டும் நபர் பிரதமராக ஆனால், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக நீட்டிக்கப்பட்டு, அவர்களுக்கான கூலியும் உயர்த்தப்படும்.

இவை அனைத்தும் உங்கள் கையில் தான் உள்ளன. நீங்கள் அனைவரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்" எனத் தெரிவித்தார். தற்போது நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, "இந்தியா" கூட்டணி என்ற பெயரில் பல கட்டமாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் சபாநாயகர் அப்பாவு முதன்முதலாக மு.க ஸ்டாலின் பிரதமராகலாம் என கூறி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:Chandrababu Naidu arrest : ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது! ஆந்திர சிஐடி போலீசார் நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details