தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அப்பளம் போல் நொறுங்கிய கார்! கைக்குழந்தை உட்பட 4 பேர் சாவு - கரும்புளியூத்தில்

நெல்லை: ஆலங்குளத்தையடுத்த கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கைக்குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கார் மோதி விபத்து

By

Published : Apr 30, 2019, 8:32 AM IST

திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்று காலையில் காரில் புறப்பட்டனர். அப்போது, கார் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தையடுத்த கரும்புளியூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுக்கியது. அப்போது, காரில் பயணித்த கைக்குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கார் மோதி விபத்து

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details