நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கூறுகையில், "நெல்லை மற்றும் தென்காசி மக்களவை தொகுதிகளில் 517 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அதனைக் கண்காணிக்கும் வகையில் 324 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் 1000 வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் - மாவட்ட ஆட்சியர் - thirunelveli
திருநெல்வேலி: பதற்றமான வாக்குசாவடிகள் உள்பட ஆயிரம் வாக்குசாவடிகளில் கண்கானிப்பு கேமராகள் பொருத்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
ஷில்பாபிரபாகர்சதீஷ்
பதற்றமான வாக்குசாவடிகள் உள்பட 1000 வாக்குசாவடிகளில் கண்கானிப்பு கேமராகள் பொருத்தப்பட்டு கண்கானிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை 2 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 939 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது" என தெரிவித்தார்.