தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையால் இடிந்து விழுந்த கட்டடம்: நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த முதியவர் - old man escaped in nellai

நெல்லை: தொடர் மழையால் பாளையங்கோட்டையில் வீடு இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Building collapsed by rain: Luckily the old man escaped in nellai
Building collapsed by rain: Luckily the old man escaped in nellai

By

Published : Dec 4, 2020, 11:32 AM IST

Updated : Dec 4, 2020, 1:15 PM IST

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது லேசான சாரல் தூவியது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில் இன்று காலை தொடர் மழையின் காரணமாக முதியவர் ஒருவரின் வீடு இடிந்து விழுந்தது. பாளையங்கோட்டை கூற்று நாயனார் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (74). இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் அவரது மனைவி வேலம்மாளுடன் (70) தனது பூர்விக வீட்டில் வசித்துவருகிறார்.

சுமார் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த வீட்டின் மேற்கூரை சுண்ணாம்புக் கலவையால் கட்டைகள் வைத்து கட்டப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் வீடு அதிக ஈரப்பதத்தை உள்வாங்கி இடிந்து விழும் அபாய நிலையில் இருந்துள்ளது.

இடிந்த வீட்டின் மேற்பரப்பு

இந்த நிலையில் இன்று காலை திடீரென வீட்டின் படுக்கை அறையின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்துவிழுந்துள்ளது. அந்தச் சமயம் இருதயராஜின் மனைவி வேலம்மாள் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார். ஆனால் இருதயராஜ் வீட்டினுள்ளே இருந்ததால் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்துள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அவரது மூத்த மகன் செல்லப்பாண்டியன், அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று இடிபாடுகளுக்குள் சிக்கிய இருதயராஜை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். நல்வாய்ப்பாக தலை, காலில் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

தகவலறிந்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் செல்வன் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டனர். காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், வீட்டின் மேற்கூரையில் தண்ணீர் வடிந்துசெல்ல உரிய குழாய் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி சுவர் பலவீனமடைந்து இடிந்துள்ளது தெரியவந்தது. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல்வேறு பொருள்கள் சேதமடைந்துள்ளன.

இதையும் படிங்க:திருவையாறில் ஏழு வீடுகள் இடிந்து சேதம்!

Last Updated : Dec 4, 2020, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details