தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் புத்தகத் திருவிழா! - பள்ளி மாணவர்கள் ஆர்வம்

திருநெல்வேலி: சுரண்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

புத்தகத் திருவிழா

By

Published : Oct 13, 2019, 9:22 AM IST

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சுமார் நூற்றுக்கும் அதிகமான பதிப்பகங்களின் புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. பல முக்கிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதிய நாவல்களும், குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஆன்மீக புத்தகங்கள், அரசாங்க வேலைவாய்ப்பு பயிற்சி புத்தகங்கள், உலக தலைவர்களின் வரலாறுகள், தமிழ் இலக்கியங்கள் என ஏராளமான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது,

மேலும் இப்புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி - வினா போட்டி மற்றும் பல போட்டிகளும் நடைபெற்றது. அதேபோல் இலக்கிய விருது வழங்குதல், குறும்படம் திரையிடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுரண்டையில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா

இப்புத்தக திருவிழாவிற்கு திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

இதையும் படிங்க: 5ஆம் கட்ட கீழடி அகழாய்வு - நூலாக வெளியிட்ட தமிழ்நாடு தொல்லியல் துறை

ABOUT THE AUTHOR

...view details