தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுரண்டையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா! - Book festival Surandai useful to school children

திருநெல்வேலி: சுரண்டையில் நடைபெற்றுவரும் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில், அச்சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்

Book festival at Surandai Tirunelveli

By

Published : Oct 12, 2019, 11:38 PM IST

திருநெல்வேலி மேற்கு மாவட்டம் சுரண்டையில், மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் அதிகமான பதிப்பகங்களின் புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

பல முக்கிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதிய நாவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஆன்மீகப் புத்தகங்கள், அரசாங்க வேலைவாய்ப்பு பயிற்சிப் புத்தகங்கள், இந்திய உலகத் தலைவர்களின் வரலாறுகள், தமிழ் இலக்கியங்கள் என ஏராளமான புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும் மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா போட்டி என பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Book festival at Surandai Tirunelveli

மேலும் இந்நிகழ்ச்சியில் இலக்கிய விருது வழங்குதல், குறும்படம் திரையிடல், பரிசளிப்பு விழா, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பலருக்கும் இப்புத்தக விழா பயனளிக்கும் விதமாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 9 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details