திருநெல்வேலியில் பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கான ஐக்கிய சிறப்பு சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, ”தமிழ்நாடு அரசின் சார்பில் எங்களுக்கு மாவட்டத்தில் பயணம் செய்வதற்கென இலவச பேருந்து அட்டை வழங்கப்பட்டுவருகிறது. அந்த இலவச பேருந்து அட்டை மாநிலம் முழுவதும் பயணம் செய்யும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் அல்லது ஒரு மண்டல அளவிலாவது பயணம் செய்ய விரிவுப்படுத்த வேண்டும்.
‘பார்வைத் திறன் குறைந்தவர்களின் 12 அம்ச கோரிக்கைகள்’
திருநெல்வேலி: பார்வைத் திறன் குறைந்தவர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதனை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்படும் இருக்கைகள் முன்புபோல் ஒதுக்கப்படுவது இல்லை. அவைகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இசைப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்ற பார்வைத் திறன் குறைந்தோர் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுவதை நிரந்தரமாக்க வேண்டும்.
எங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் உதவித் தொகையை மாதத்திற்கு 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். சமூக நலத்துறையில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் எங்களுக்காக இருந்த வரவேற்பாளர் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அவைகளை நிரப்ப அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.