திருநெல்வேலி: கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் திவ்யா. இவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
காவலர் திவ்யா கர்ப்பம் அடைந்த நிலையில் ராதாபுரம் காவல் நிலையத்தில் இருந்து பணகுடி காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கர்ப்பிணியாக புதிய காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற திவ்யாவுக்கு காவல் நிலையத்தில் வைத்தே வளைகாப்பு நடத்த பணகுடியில் பணிபுரியும் சக காவலர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் அருண் ராஜா தலைமையில் திவ்யாவிற்கு வளைகாப்பு வைபவத்தை வெகு விமரிசையாக நடத்தினர். வீட்டில் உறவினர்கள் நடத்துவதை போன்று திவ்யாவிற்கு வளையல்கள் அணிவித்தும், சந்தனம் தடவியும், விருந்து உபசாரம் செய்தும் குடும்ப நிகழ்ச்சியாக நடத்தினர்.
கர்ப்பிணி பெண் காவலருக்கு சக காவலர்கள் காவல் நிலையத்தில் வளையகாப்பு! திடீரென தனக்கு நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்வை எண்ணி காவலர் திவ்யா பெருமகிழ்ச்சி அடைந்தார். காவல் நிலையத்தில் வளைகாப்பு நடந்த இந்த நிகழ்வு சக பெண் காவலர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: 'திமுக அமைச்சரவை ஊழல் பெருச்சாளிகளின் கூடாரம்'- அண்ணாமலை பரபரப்பு பேச்சு