தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு - TN Police

நெல்லையில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லையில் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு
நெல்லையில் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு

By

Published : Nov 30, 2022, 10:12 AM IST

திருநெல்வேலி: பழவூர் காவல் உதவி ஆய்வாளராக பார்த்திபன் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (நவ 29) மாலை பழவூர் அருகே உள்ள அம்பலாவனபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஆற்று மணலை கடத்தி வந்துள்ளனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்தி அனுமதி சீட்டை சரிபார்த்த காவல் உதவியாளர் பார்த்திபனை, சங்கர் என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் உடன் இருந்த காவலர் கார்த்தீசனை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அரிவாளால் வெட்டுப்பட்ட உதவி ஆய்வாளர் பார்த்திபன், ரத்தம் சொட்ட சொட்ட அவர்களிடம் சண்டையிட்டு இருவரையும் கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சங்கர் மற்றும் மணிகண்டன்

பின்னர் அவர்களிடம் இருந்து மணல் ஏற்றி வந்த வாகனம் மற்றும் அரிவாளை கைப்பற்றப்படட்து. இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த உதவி ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவலர் கார்த்தீசன் ஆகியோர் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே மணல் கடத்தலில் ஈடுபட்ட சங்கர் மீது பழவூர், பல் மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இடையூறாக இருந்த மண் குவியல் அகற்றம்!

ABOUT THE AUTHOR

...view details