தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெயில் தாக்கத்தால் கண்டபடி பேசுகிறார்- சபாநாயகரை சாடிய அதிமுக மாஜி எம்எல்ஏ - அதிமுகவின் முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு தட்டுபாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக் கொடுத்தார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை ராதாபுர தொகுதியின் பல்வேறு குறைகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக் கொடுத்தார்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை ராதாபுர தொகுதியின் பல்வேறு குறைகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக் கொடுத்தார்

By

Published : May 29, 2023, 10:14 PM IST

அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை ராதாபுர தொகுதியின் பல்வேறு குறைகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக் கொடுத்தார்.

திருநெல்வேலி:ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் அதிமுக வழக்கறிஞருமான இன்பதுரை, ராதாபுர தொகுதியின் பல்வேறு குறைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குறைகளின் காரணங்களையும் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தன் கண்டனங்களை தெரிவித்தார்.

மனுவில் கோரப்பட்டவை:ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியூர் பேருந்து நிலையத்தின் கட்டட வேலைகளை துரித படுத்த வேண்டும்.

வள்ளியூர் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் இயக்கப்படும் பேருந்துகளை வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவின் முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

செய்தியாளர்களின் சந்திப்பு:மனுக்கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடும் சூழல் உருவாகியுள்ளது. தண்ணீர் மாபியாக்களால் கட்டுமான நிறுவனங்கள், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவைகளுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுவதே, ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான காரணம்.

வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. அதிகாரிகளுக்கு இது சோதனையான காலமாக உள்ளது. அதிகாரிகள் தாக்கப்பட்டதாக புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக அரசுக்கு சி.ஆர்.பி.சி, ஐ.பி.சி போன்ற சட்டங்களை எதுவும் தெரியாமல் ஆட்சி நடந்து வருகிறது.

கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். பீகார், ஒரிசா, தெலுங்கு படங்களில் மட்டும் தான் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற காட்சிகள் வந்தது. ஆனால் தற்போது தமிழகத்திலும் அந்த நிலை உருவாகியுள்ளது. லண்டன் மாநகரில் தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்த பென்னிகுயிக் திருவுருவச் சிலை உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் கருப்பு துணி கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்து நீண்ட நாட்கள் ஆகியும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. லண்டன் மாநகரில் தமிழகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகியுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை லண்டனில் உள்ள பென்னிகுயிக் உறவினர்கள் விரைவில் சந்தித்து பேச உள்ளனர்.

வயது முதிர்வு காரணமாகவும் வெயிலின் தாக்கம் காரணமாகவும் கண்டபடி சபாநாயகர் பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ராதாபுரத்தில் திறப்பு விழா கொண்டாடுகின்றனர்” என பல்வேறு தட்டுபாடுகளையும் குறைகளுயும் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளை வன்மையாக சாடினார்.

இதையும் படிங்க:சிவகங்கை பாண்டியன் கோட்டையில் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு: தொல்லியல் துறை

ABOUT THE AUTHOR

...view details