தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை மேயர் யார்? அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! - நெல்லை

நெல்லையில் மேயர் யார்? என கேள்வி எழுப்பி அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

By

Published : Nov 14, 2022, 1:33 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் ஆளுங்கட்சியினரே மேயர் சரவணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். குறிப்பாக திமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னையால் சில திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக போராடி வருகின்றனர்.

தங்கள் பகுதியில் எந்த பணியும் நடக்கவில்லை என ஏழாவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் இந்திராணி சமீபத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழலில் நெல்லையில் மேயர் சரவணனா? அல்லது திமுக மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப்பா? என கேள்வி எழுப்பி அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்துல் வஹாப் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆவார், நெல்லை மாநகராட்சியில் உள்ள பெரும்பாலனா திமுக கவுன்சிலர்கள் அவரது கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. குறிப்பாக மேயரையும் மாவட்ட செயலாளர் தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழலில் மேயரையும் மாவட்ட செயலாளரையும் தொடர்புபடுத்தி அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால், நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையில் போஸ்டர் சம்பவம் தொடர்பாக இலந்தை குளத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவரிடம் பாளையங்கோட்டை காவல்துரையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:திமுகவினரின் சுவரோவியத்தில் மாட்டு சாணம் வீச்சு - கரூரில் பாஜகவினர் 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details