திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகையுமான நமீதா திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட டவுண் பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், கடந்த முறை பல்வேறு நலத்திட்டங்களைத் திருநெல்வேலி தொகுதிக்குக் கொண்டுவந்துள்ளார். தாமரைக்கு வாக்களித்தால் ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளைகள் வழங்கப்படும்.