நெல்லை:ஒன்றிய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் பனைமரங்களையும், முருங்கை மரங்களையும் நடுவதையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ”கிராமபுற மக்களின் வாழ்வாதாரத்துக்காக, வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு மத்திய அரசு, ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கும் திட்டமான, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் தமிழ்நாட்டில் நட உத்தரவிட வேண்டும்.