தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நான் எப்பவும் எம்ஜிஆர்-க்கு தான் ஓட்டு போடுவேன்' 99 வயது மூதாட்டி பளீச் - nellai

நெல்லை: நான் எப்பவும் எம்ஜிஆர்-க்கு தான் ஓட்டு போடுவேன் என கீழப்பாவூரில் தனது பேரனின் துணையோடு தமது வாக்கினை பதிவு செய்த 99 வயது மூதாட்டி ஆறுமுகத்தம்மாள் கூறியுள்ளார்.

99years-granny-voting

By

Published : Apr 18, 2019, 2:02 PM IST

தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் மக்களவை பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் பவர் பத்திரத்தை அடுத்த கீழப்பாவூரில் இன்று ஐந்து தலைமுறை கண்ட 99 வயது மூதாட்டி ஆறுமுகத்தம்மாள் தனது பேரனுடன் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற இந்து மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.

நடக்க மிகவும் கஷ்டப்படுகிற ஆறுமுகத்தம்மாள் தனது பேரனின் துணையோடு மெதுவாக நடந்து வந்து தமது வாக்கினை பதிவு செய்தார். அவரிடம் தங்கள் வயது என்ன என்று விசாரித்ததற்கு நான் எப்பவும் எம்ஜிஆருக்கு தான் ஓட்டு போடுவேன் என்று கூறினார். வயது முதிர்வு காரணமாக காது கேட்கவில்லை என்று அவரது பேரன் கூறினார். அவர் வந்து வாக்களித்தது மற்ற வாக்காளர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details