தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ட்ரிங் ட்ரிங்... நெல்லை தேரோட்டத்தில் கவனத்தை ஈர்த்த 90’ஸ் கிட்ஸ்களின் மிட்டாய்!

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத் திருவிழாவில் 90’ஸ் கிட்ஸ்களின் பிடித்த உணவான சவ்வு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டது. அதனை பல 2k- கிட்ஸ்கள் வாங்கி ருசி பார்த்தனர்.

nellai chariot
நெல்லை தேரோட்டம்

By

Published : Jul 2, 2023, 6:58 PM IST

Updated : Jul 2, 2023, 7:40 PM IST

ட்ரிங் ட்ரிங்... நெல்லை தேரோட்டத்தில் கவனத்தை ஈர்த்த 90’ஸ் கிட்ஸ்களின் மிட்டாய்!

திருநெல்வேலி:நெல்லை மக்களின் முக்கியத் திருவிழாவான நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட திருவிழா இன்று நடைபெற்றது. சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த நெல்லையப்பர் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது.

குறிப்பாக நெல்லையப்பர் கோயிலின் தேர் தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய தேர் ஆகும். 450 டன் எடையுடன் 70 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் தேர், திருவிழாவின்போது ரத வீதிகளில் தவிழ்வதைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். அந்த வகையில் இன்று ஆனித்தேரோட்ட விழாவை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேரோட்டத்தைக் கண்டு, நெல்லையப்பரையும் காந்திமதியம்மையையும் தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் குடும்பமாக வந்து தேரோட்டத்தைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் ரத வீதிகளில் பல்வேறு வகையான கடைகள் புதிதாக முளைத்துள்ளது. குறிப்பாக குழந்தைகளைக் கவரும் விளையாட்டு பொருட்கள் மற்றும் பெண்களை கவரும் பேன்சி பொருட்கள், டீக்கடைகள், திடீர் உணவகங்கள், இனிப்பு - கார கடைகள் எனப் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் கீழ ரத வீதியில் 90’ஸ் கிட்ஸ்களின் சுவாரஸ்ய தின்பண்டமான சவ்வு மிட்டாய் விற்பனையானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது 1990 காலகட்டங்களில் மூங்கில் கம்பில் சவ்வு மிட்டாய் சுத்திய நபர் வீதி வீதியாக வலம் வருவதைப் பார்க்க முடியும். சர்க்கரை( சீனி) மூலம் தயார் செய்யப்பட்ட சவ்வு மிட்டாயை மூங்கிலில் சுற்றி வைத்து, அதன் மேலே குழந்தைகளைக் கவரும் வகையில் பொம்மை ஒன்றை வைத்திருப்பார்கள். ஆனால், காலப்போக்கில் 5 ஸ்டார், மஞ்ச், பானி பூரி, பப்ஸ் எனப் பல நவீன தின்பண்டங்களை தற்போது 2k கிட்ஸ் விரும்பத் தொடங்கினர். எனவே 90’ஸ் கிட்ஸ்களின் பாரம்பரிய தின்பண்டமாக கருதப்படும் சவ்வு மிட்டாய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்தது.

இதனால் சவ்வு மிட்டாய் வியாபாரம் செய்வோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. தற்போது சவ்வு மிட்டாய் விற்பனை செய்யும் நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த வள்ளி என்பவர் சவ்வு மிட்டாய் வியாபாரத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். நெல்லையப்பர் கோயில் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு வள்ளி, இன்று நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் சவ்வு மிட்டாய் வியாபாரம் செய்தார்.

இதைப் பார்த்த 2k கிட்ஸ்கள் ஆச்சரியமுடன் வள்ளியை பார்த்தனர். மேலும்,விவரம் அறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆசையோடு ஓடிச் சென்று சவ்வு மிட்டாயை வாங்கிக் கொடுத்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் சவ்வு மிட்டாயை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.

எனவே, பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தின்பண்டம் என்பதால், பலர் சவ்வு மிட்டாயை மிக ஆர்வமோடு வாங்கி உண்டனர். அதேபோல், இளைஞர்களும் வித்தியாசமாக இருக்கிறது என்று வாங்கிச் சாப்பிட்டனர். பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் 90’ஸ் கிட்ஸ் சவ்வு மிட்டாய் கவர்ந்து இழுத்தது.

குழந்தைகளுக்கு கையில் வாட்ச் போன்று வடிவமைத்து, சவ்வு மிட்டாய் விற்பனையாளர் வள்ளி கட்டி விட்டார். அதேபோல் மயில் போன்ற பறவைகளின் வடிவிலும் கொடுத்தார்.

இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் வள்ளி பிரத்யேகமாகப் பகிர்ந்துகொண்டதாவது, 'இப்போது 5 ஸ்டார் மஞ்ச் போன்ற வித விதமான சாக்லேட்டினை குழந்தைகள் சாப்பிடுகின்றனர். ஆனால், அந்தக் காலத்தில் இது தான் 5 ஸ்டாராக இருந்தது. தென் மாவட்டங்களில் கோயில் தேரோட்டங்களில கண்டிப்பாக சவ்வு மிட்டாய் விற்பனை செய்யப்படும்' என்றார்.

மேலும், 'இன்று நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் நடைபெறுவதால் இங்கு விற்பனை செய்கிறேன்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:காலாவதியான மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி... திருப்பூரில் நடந்தது என்ன?

Last Updated : Jul 2, 2023, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details