திருநெல்வேலி மாநகர் பகுதியில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க, மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவினர், கடந்த 7ஆம் தேதி முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் மூன்று நாள்களில் 39 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ. 32 ஆயிரம் வசூல்!
திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 39 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.32 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 3 நாட்களில் மட்டும் 39 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் பயன்படுத்திய காரணத்துக்காக, 110 சிறு மற்றும் குறு நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர்களிடம் ரூ. 32 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாழைமரத்தின் நடுவில் வாழைத்தார் - ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்