தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் கைதி கொலைக்கு நீதி கேட்ட 127 பேர் கைது!

By

Published : Jun 28, 2021, 10:13 PM IST

நெல்லையில் கைதி கொலைக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க வாகை குளத்தில் இருந்து புறப்பட்ட 40 பெண்கள் உள்பட 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

127-people-arrested-in-tirunelveli-vagaikulam
நெல்லையில் கைதி கொலைக்கு நீதி கேட்ட 127 பேர் கைது!

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சக கைதிகளால் முத்துமனோ என்ற கைதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், நீதிகேட்டு உறவினர்கள் 68 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், முத்து மனோ கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் ஆதார் கார்டு, ரேஷன் அட்டைகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வருவதாக தகவல் வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய நான்கு மாவட்ட எஸ்பிக்கள் கண்காணிப்பில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு கடும் சோதனைக்குப் பிறகு ஊழியர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

நெல்லையில் கைதி கொலைக்கு நீதி கேட்ட 127 பேர் கைது

127 பேர் கைது

முத்து மனோவின் சொந்த ஊரான வாகைக்குளத்தில் இருந்து உறவினர்கள் வருவதைத் தடுக்கவும் அங்கேயும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புறப்பட்ட முத்து மனோ உறவினர்கள், ஊர் பொதுமக்கள் 127 பேரை முன்னெச்சரிக்கையாக வாகைக்குளத்தில் காவல் துறையினர் கைது செய்து நாங்குநேரி அழைத்துச் சென்றனர்.

அப்போது, காவல் துறையினருக்கு எதிராக ஊர் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். இச்சம்பவத்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பரபரப்பு நிலவிவருகிறது.

ஊர் மக்களின் கோரிக்கை

முத்து மனோவின் குடும்பத்தினருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து முத்து மனோவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:'பிரசவத்துக்கு சென்ற இடத்தில் செவிலியர்கள் சூழ வளைகாப்பு'

ABOUT THE AUTHOR

...view details