தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் ஆணையம், பறக்கும் படைகள் அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பறக்கும் படை வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையிலான அலுவலர்கள், திருநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வந்த வாகனத்தைச் சோதனையிட்டதில், 12 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.