தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் தொட்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.. பேரூராட்சி அலட்சியமே காரணம் என மக்கள் புகார்! - உத்தமபாளையம்

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சி சார்பில் கரியணம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 29, 2023, 11:37 AM IST

குடிநீர் தொட்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி… பேரூராட்சியின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள்!!

தேனி: உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் கரியணம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் ராஜேஷ் (21). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு கரியணம்பட்டி சாவடி தெருவில் பேரூராட்சி சார்பில் பொது மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்குச் சென்றுள்ளார்.

அப்போது குழாய் தண்ணீர் வழியாக ராஜேஷ் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கோம்பை காவல்துறையினர் ராஜேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜேஷ் இறப்பு குறித்து கோம்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பேரூராட்சியின் சார்பில் வைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி பலியானதால் அவரின் உறவினர்கள், பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுபட முற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதே பண்ணைப்புரம் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகாதார வளாகத்தின் செப்டிக் டேங்க் மேல் மூடி உடைந்து இரண்டு குழந்தைகள் அதில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவத்திற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: திமுக உள்பட அனைத்து கட்சியினரும் வெளிநடப்பு.. சின்னமனூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details