தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேவுள்ள கைலாசபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர ரோந்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.
தேனியில் கஞ்சா விற்ற இளைஞர் கைது - ஐந்து கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல்
பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து ஐந்து கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
youth-arrested-for-selling-cannabis
அப்போது கைலாசநாதார் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் சிவதேசிங்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது