தேனி மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் உள்ள கோட்டைமேட்டுத் தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரது மகன் காசிமாயன்(20). இவர் அதே பகுதியில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும் 17 வயது மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட மாணவியை, காசிமாயன் கடத்திச் சென்று நேற்று (நவம்பர் 8) வீட்டிற்கு கொண்டு வந்து விட்டதாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.