தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தாய் - தந்தை இல்லாத நிலையில் தனது தாத்தா பராமரிப்பில் வளர்ந்துவந்தார். கரூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராகப் பணிபுரிந்துவந்தார்.
கரோனா காலத்தில் ஊர் திரும்பிய சிறுமி, போடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி தீராத வயிற்று வலி என அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பிணியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அன்றிரவே அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்குப் பிறகு சிறுமிக்கு ரத்தப்போக்கு அதிகமான காரணத்தால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் - சேய் இருவரும் அனுமதிகப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.