தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கை உறவு கொண்ட சிறுமியை அம்மாவாக்கிய காமுகன்!

தேனி: குரங்கணி அருகே தங்கை உறவு கொண்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

rape

By

Published : Feb 6, 2019, 10:11 AM IST

தேனி மாவட்டம் குரங்கணி அருகே உள்ள நரிப்பட்டியைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (21). இவர், தனது தந்தையின் சகோதரர் மகளான 19 வயது சிறுமியை கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் வல்லுறவு செய்துவந்துள்ளார்.

இதன் காரணமாக கர்ப்பம் அடைந்த சிறுமிக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக குரங்கணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குரங்கணி காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details