தேனி மாவட்டம் போடி தாலுகாவில் மீனாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம், பத்ரகாளிபுரம் உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் வெள்ளைச் சோளம் சாகுபடி நடைபெறும்.
இதில் இறவைப்பாசனம், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் சோளப்பயிர் நான்கு மாதங்களில் அறுவடை செய்யப்படுவதால் விவசாயிகள் பலர் இதில் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.
இந்த சோளப்பயிர்களை சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கோழி தீவனத்திற்காக மொத்த விற்பனையில் கொள்முதல் செய்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டும் தேனியில் வெள்ளைச் சோளம் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சல் கண்டது. இருந்தபோதும், வெளி மாவட்ட வியாபாரிகளின் வருகை இல்லாததால் குவின்டாலுக்கு (100கிலோ) ஏறக்குறைய ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விளைச்சல் இருந்தும் விலை இல்லை: சோள விவசாயிகள் வேதனை! இது குறித்து போடி பகுதி சோளப்பயிர் விவசாயி கூறுகையில், “விதை, நடவு, உழவு, உரம், மருந்து, அறுவடை, வேலைஆள்கள் கூலி என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது.
இத்தனை செலவுகளை தாண்டி உற்பத்தி செய்யப்படும் சோளத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை கொள்முதல் விலை கிடைத்தால் தான் கட்டுப்படியாகும். ஆனால் தற்போது வெளி மாவட்ட வியாபாரிகள் இல்லாததால் இந்தாண்டு சரியான விலை கிடைக்கவில்லை” என வேதனையுடன் கூறினார்கள்.
இதையும் படிங்க...சென்னையில் 478 மருத்துவ முகாம்கள்...! - மாநகராட்சி ஆணையர்