உலக நாடுகளை தன் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள கரோனா என்கிற அரக்கன். இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய, நாடு முழுவதும் 52 ஆய்வுக்கூடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதனடிப்படையில், தமிழ்நாட்டில் இரண்டாவது இடமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லி மாநாட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றது தெரியவந்தது.
இதையடுத்து மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது மருத்துவக் கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போடியைச் சோந்த நபரின் மனைவி நேற்று (ஏப்ரல்-4) உயிரிழந்தார். இதனையடுத்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நேற்றிரவு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"கரோனா நோயாளிகளை கையாள்வது, சிகிச்சையளிப்பது உள்ளிட்ட விசயங்களில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் உள்ள பிரச்னை சம்பந்தமாக நேற்று முகநூலில் தெரிவித்திருந்தேன். நேற்று பிற்பகல் கரோனா நோயாளி ஒருவர் இறந்துள்ளார்.