தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ள மஞ்சளாறு அணையின் மொத்த கொள்ளளவு 57 அடியாகும். 2018ஆம் ஆண்டு கஜா புயலினால் பெய்த கனமழையால் அணை மொத்தக்கொள்ளளவை எட்டியது. இதனால் அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள நிலங்களுக்கு ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர் நீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.
வற்றிய நிலையில் மஞ்சளாறு அணை; விவசாயிகள், பொதுமக்கள் வேதனை! - reduces
தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36 அடியாகச் சரிந்துள்ளது. இதனால் விவசாய நிலங்களிலுள்ள கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மலைப்பகுதி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையில்லாததால் அணையின் நீர்வரத்து தற்போது முற்றிலும் தடைபட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் வெகுவாக சரியத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 36.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 138.10 மி கன அடியாக இருக்கின்றன. அணைக்கு நீர்வரத்து ஏதும் இல்லாததால், நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைவதுடன் பாசன பரப்பில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.