தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மலைக்கிராமங்களில் வாக்குச் சாவடிகளை அணுகுவதில் சிக்கல் இருந்தால் தெரிவிக்கலாம்' - sigy thomas vaidhyan ias

மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடியினை அணுகுவதற்கு நீர்நிலைகள், மலைகள் போன்ற இடையூறு ஏதேனும் இருப்பின் அதனை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கலாம் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.

sigy thomas vaidhyan ias
'மலைக்கிராமங்களில் வாக்குச் சாவடிகளை அணுகுவதில் சிக்கல் இருந்தால் தெரிவிக்கலாம்' -சிஜி தாமஸ் வைத்யன்

By

Published : Jan 1, 2021, 7:16 AM IST

தேனி: தேனி மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (டிசம்பர் 31) நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக நிர்வாக மேலாண்மை இயக்குநருமான சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, பேசிய ஆட்சியர், "2021ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற்றது. இதில், நவம்பர் 21,22 மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 51 ஆயிரத்து 152 மனுக்கள் பெறப்பட்டன. சிறப்பு முகாம் மனுக்கள், சிறப்பு சுருக்க திருத்த காலங்களில் பெறப்பட்ட மனுக்களில் 95 விழுக்காடு மனுக்கள் தீர்வு காணப்பட்டன" என்றார்.

'மலைக்கிராமங்களில் வாக்குச் சாவடிகளை அணுகுவதில் சிக்கல் இருந்தால் தெரிவிக்கலாம்' -சிஜி தாமஸ் வைத்யன்

இதையடுத்து பேசிய வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்யன், "மலைக் கிராமங்களில், வசிக்கும் மக்கள், தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடிகளை அணுகுவதற்கு நீர்நிலைகள், மலைகள் போன்ற இடையூறு ஏதேனும் இருப்பின், அதனை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கலாம். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து தேர்தல் தொடர்பான பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:’ஜனவரியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’: ஆட்சியர் செந்தில்ராஜ்

ABOUT THE AUTHOR

...view details