தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது சாலிமரத்துப்பட்டி. இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான சாக்கடை, குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
கிராமத்தை காலி செய்து மலையில் குடியேற கிராம மக்கள் முடிவு - settle in hill
தேனி: போடி அருகே கடந்த 8 வருடங்களுக்கு மேலாக மாவட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தராததால், தேர்தலை புறகணிப்பதோடு மட்டுமல்லாமல், தங்களது வசிப்பிடத்தை காலிசெய்து மலைப்பகுதியில் குடியேறவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள் தேனி, போடி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவதற்கு இங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, பேருந்து ஏறும் அவல நிலை உள்ளது. குறிப்பாக குடிநீர், சுகாதாரம், உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால், டெங்கு போன்ற தொற்று நோய்களின் தாக்கம் அதிகம் உள்ளது. வாழ தகந்த சூழலை அரசு செய்து தராததால், தேர்தலை புறகணிப்பதோடு, கிராமத்தை விட்டு வெளியேறி மலைப்பகுதியில் குடியேற திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.