தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கீழபுலாநந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் முருகேஸ்வரி, நாகலெட்சுமி. கட்டிடத் தொழிலாளர்களான இருவரும் நேற்று (மே 22) மாலை வேலையை முடித்துவிட்டு சின்னமனூரில் இருந்து நடந்தே தங்களது ஊருக்கு வந்துள்ளனர். திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் ஒன்று இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.