கேரளா மாநிலம் மூணாறு லக்காடு எஸ்டேட்டில் பகுதியில் கடந்த சில மாதங்களாக புலி நடமாட்டம் உள்ளது. எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பசுமாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மேய்ச்சலுக்கு சென்ற ரவி மற்றும் அவரது சகோதரர் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான ஏழு மற்றும் எட்டு மாத கர்ப்பமான மாடுகளை புலி தாக்கி கொன்றது தெரியவந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளது. மேலும் மூணாறை சுற்றியுள்ள தோட்டப்பகுதியில் கடந்த ஓரு வருடத்தில் 70க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய் என பல கால்நடைகளை புலி வேட்டையாடி கொன்றுள்ளது.
வனத்துறையினர் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.