தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டிலும் கரோனாவா?' தேனியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் மருத்துவமனையில் அனுமதி - Chief Minister Pranayi Vijayan

தேனி: கரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு நபர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Two Coronovirus suspects in Theni
Two Coronovirus suspects in Theni

By

Published : Feb 5, 2020, 11:12 PM IST

Updated : Mar 17, 2020, 5:51 PM IST

சீனாவில் கடந்த ஒரு மாதமாக அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜப்பான், ஹாங்காங், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதித்துள்ளதாகக் கூறி, மாநில பேரிடராக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சீனாவில் படித்த, பணிபுரிந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

’தமிழ்நாட்டிலும் கரோனாவா?’ - தேனியில் இருவருக்குப் பாதிப்பு!

அவர்கள் இருவரும் கரோனா வைரஸ் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். கரோனா வைரஸ் அறிகுறியால் தேனியில் இருவர் சிகிச்சைப் பெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் சந்தேகம் - 7 பேர் தொடர் கண்காணிப்பு!

Last Updated : Mar 17, 2020, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details