கம்பம்:தேனி மாவட்டம், கம்பம் அருகே அமைந்துள்ளது, சுருளி அருவி. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் தினமும் ஏரளாமான சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து விட்டுச் செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலாப்பயணிகளும் சுருளி அருவிக்கு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த நிக்ஸன் குடும்பத்தினருடன் சுருளி அருவிக்குச் சென்றார். அருவியில் குளித்து முடித்த பின், சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். நிக்ஸனின் மகள் பெமினா (15) உள்ளிட்டோர் அருவிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். வெண்ணியாறு பாலத்தின் அருகே சென்ற போது, மரக்கிளை ஒன்று எதிர்பாராத விதமாக பெமினாவின் தலைப்பகுதியில் முறிந்து விழுந்தது.