மதுரை மாவட்டம் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருள்மணி (37). இவர் தனது குடும்பத்துடன் இன்று (டிச.1) தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இவர் சென்ற சுற்றுலா வேனில் குழந்தைகள், பெண்கள் என 15 பேர் இருந்தனர்.
பின்னர் அவர்கள் ஊர் திரும்பிய போது தென்பழனி அடிவாரத்தில் உள்ள நான்காவது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அங்கிருந்த கம்பியின் மீது வேன் மோதியதால் சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் வேன் ஓட்டுநர் திருநாவுக்கரசு (50), அருள்மணி (37), காளியம்மாள் (75), மற்றும் திருச்சியைச் சேர்ந்த தர்சினி (11) என்ற சிறுமி ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.