மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியை சேர்ந்தவர் மணி என்ற பரமத்தேவர்(55). இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தொக்கம் எடுக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இங்கு வயிற்று வலி, பசியின்மை உள்ளிட்டவைகளுக்கு வாயில் உறிஞ்சு எடுத்தல் மற்றும் வயிற்றை தட்டி தொக்கம் எடுப்பது வழக்கம்.
இளம் பெண்ணிடம் அத்துமீறிய நாட்டு வைத்தியர் கைது! - undefined
தேனி: உடல்நிலை சரியில்லாத பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நாட்டு வைத்தியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியை சேர்ந்த சின்னராஜ் என்பவர் தனது மனைவி கண்மணிக்கு (19) உடல் நிலை சரியில்லாததால் தொக்கம் எடுப்பதற்காக அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தொக்கம் எடுத்தபோது மணி, கண்மணியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்மணியின் கணவர் சின்னராஜ் மற்றும் சகோதரர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மணியை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் அவரது முதுகில் லேசான ரத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த க.விலக்கு காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர். உடல்நிலை சரியில்லாமல் வருகின்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TAGGED:
SEXUAL HARRASEMENT