தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூரைச் சேர்ந்தவர் முருகேசன் (27). டிராக்டர் ஓட்டுநரான இவர், இன்று அனுமதி பெற்று குறு மணல் எடுப்பதற்காக டிராக்டர் ஓட்டிச் சென்றுள்ளார். கணேசபுரம் செல்லும் வழியில் உள்ள ஜி.உசிலம்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக முன் டயர் வெடித்ததில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முருகேசன் டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
டயர் வெடித்து டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி!
தேனி: கணேசபுரம் செல்லும் வழியில் டயர் வெடித்து, டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
DRIVER DEATH
இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஜேசிபி வாகன உதவியுடன் உயிரிழந்த முருகேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது சம்பந்தமாக கண்டமனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.