தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனப்பகுதியில் புலி உயிரிழப்பு! விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை

தேனி: மேகமலை வன உயிரினப்பகுதியில் உயிரிழந்த புலி தேசிய புலிகள் காப்பக விதிகளின் நெறிமுறைப்படி உடற்கூறாய்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்டது.

புலி உயிரிழப்பு

By

Published : Apr 7, 2019, 8:13 AM IST

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப்பகுதியில் வனத் துறை பணியாளர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதியில் அப்பர் மணலாறு என்ற இடத்தில் புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து வனத் துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, புலியின் உடலை தேசிய புலிகள் காப்பக விதிகளின் நெறிமுறைப்படி உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

மதுரை முதன்மை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே, தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத் துறை அலுவலர்கள் முன்னிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவ அலுவலர் அசோகன், கோம்பைத்தொழு கால்நடை அறுவைச் சிகிச்சை உதவியாளர்கள் கலைவாணன் மற்றும் வைலன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் இறந்த புலியின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.

மேலும் வனத் துறை உயர் அலுவலகர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து வனத் துறை அலுவலர்கள் தெரிவிக்கையில், உயிரிழந்தது 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என்றும், புலிகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையால் உயிரிழந்திருக்கலாம் எனவும், புலியின் நரம்புகள், நகங்கள் மற்றும் தோல் ஆகியவற்றின் தன்மையின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாகக் கூறினர்.

உடற்கூறாய்வுக்குப் பின்னர் புலியின் உடல் அங்கேயே எரிக்கப்பட்டது. மேகமலை வனப்பகுதியில் இதுவரை யானைகள் மட்டுமே இறந்து வந்த நிலையில் தற்போது புலி உயிரிழந்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்களை கவலையடைய வைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details