தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அணையில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி - DEAD FOUND

தேனி : சின்னமனூர் மகாராஜா மெட்டு அணையில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணையில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

By

Published : May 14, 2019, 7:58 AM IST

மதுரை எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் ரோஹித் சஞ்சய் (21). பொறியியல் கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் மேகமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவங்கலாறு அருகே உள்ள மகாராஜா மெட்டு அணையில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ரோஹித் சஞ்சய், திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்து பதறிய நண்பர்கள், அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அணையில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஹைவேவிஸ் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் மாணவரை மீட்கும் பணியில் இறங்கினர். நேற்றுமுன்தினம் மாலையில் மழை பெய்ததாலும், நீரின் குளிர்ச்சித் தன்மையாலும், மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் நேற்று காலை உடலை தேடும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டனர். பல மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு கல்லூரி மாணவரின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்விற்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஹைவேவிஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details