திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த பாண்டியராஜ் என்பவரது மகன் திருமூர்த்தி(21). தேனி மாவட்டம், போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த திருக்குமரன் மகன் அகேஷ்(21). தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர்கள், குரங்கனி மலைப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது குரங்கனியிலிருந்து போடி நோக்கி வந்த அரசுப்பேருந்து, முந்தல் எனும் இடத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி! - இளைஞர் பலி
தேனி: குரங்கனி அருகே அரசுப்பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் இளைஞர் பலி!
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருமூர்த்தி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவரான அகேஷ் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குரங்கனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.