தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக்டாக் காணொலிகளைத் தவறாகச் சித்திரித்து வெளியிடும் விவகாரம்: காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் - ஆபாசமாக சித்தரிக்கப்படும் டிக்டாக்

தேனி: டிக்டாக் காணொலிகளை ஆபாசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக டிக்டாக் திவ்யா உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையத்தில் உள்ள தனது செல்போனை வாங்காமல் செல்ல மாட்டேன் என திவ்யா தெரிவித்துள்ளார்.

divya
divya

By

Published : Dec 10, 2020, 9:47 AM IST

இச்சம்பவம் குறித்து திவ்யா கூறுகையில், “எனது காதலன் கார்த்தி குறித்து தவறான கருத்துகளை சுகந்தி தெரிவித்ததாலேயே அவருக்கு எதிராக காணொலிகளைப் பதிவேற்றம் செய்தேன். மேலும் யூ-ட்யூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் எடுக்க வேண்டும் என்று என்னை ஏமாற்றி சுகந்தி அழைத்துவந்து, தாங்கள் கூறுவது போல காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும் எனக்கூறினர்.

டிக்டாக் விவகாரம்-காவல் நிலையத்தில் காத்திருப்பு

அவர்கள் கூறியதுபோல காவல் நிலையத்தில் தெரிவித்த பின்னர் என்னை விட்டுவிட்டு சுகந்தி சென்றுவிட்டார். இதனால் ஆறு நாள்களாக வீட்டிற்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றேன். மேலும் எனது காதலன் கார்த்தியுடன் பேசுவதற்கு செல்போன் தேவை என்பதால் அதை வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்” என அவர் தெரிவித்தார்.

டிக்டாக் காணொலிகளில் மோசடி: 5 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நாகலாபுரம் ரமேஷ் என்பவருக்கு ஆதரவாக கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு வந்தனர். டிக்டாக் சுகந்தி தொடர்ந்து பொய் புகார்கள் அளித்துவருவதாகவும், தற்போது அவரது அத்தை, கணவரை நாங்கள் அடித்து தாக்கியதால் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகப் பொய் புகார் அளிக்க உள்ளதாகவும் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. அண்மையில் அரசால் தடைசெய்யப்பட்ட டிக்டாக் செயலி பயன்பாட்டில் இருந்த காலத்தில் அதிகப்படியான காணொலிகளைப் பதிவிட்டு பிரபலம் அடைந்தவர். அதனைத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியதால், தங்களது கிராமத்திற்கு கெட்ட பெயர் என்று நாகலாபுரம் கிராம மக்களே கடந்த வருடம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சுகந்தி, அவரது சகோதரி நாகஜோதி மீது புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details