தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Theni - 20 நாட்களுக்கும் மேல் மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் மலைக்கிராம மக்கள் - அரசு நடவடிக்கை எடுக்குமா? - மலை வாழ் மக்கள்

தேனி மாவட்டம், போடி தாலுகாவிற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் 20வது நாட்களுக்கும் மேலாக மின்சாரமின்றி மலைக்கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

theni
தேனி

By

Published : Jul 10, 2023, 1:59 PM IST

20 நாட்களுக்கும் மேல் மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் மலைக்கிராம மக்கள் - அரசு நடவடிக்கை எடுக்குமா?

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், போடி தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, கருங்கல்காடு, குறவன் குழி என 10க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் பெரியகுளத்தில் இருந்து, மின் கம்பங்கள் மூலமாக செல்கின்றது. இந்நிலையில் ஊரடி, ஊத்துக்காடு பகுதியில் உள்ள மின்மாற்றியில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாத காலமாக மின்சாரம் இல்லாமல், மலைக்கிராம மக்கள் தவித்து வருவதாக வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தல தோனி‌ வெளியிடும் ‘எல்ஜிஎம்’ படத்தின் ட்ரெய்லர்!

இதுகுறித்து ஊத்துக்காடு மலைக்கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் கூறுகையில், ''கடந்த சில வருடங்களாக ஊரடி, ஊத்துக்காடு, கருங்கல்காடு உட்பட 10 கிராமங்களுக்கு சரியாக மின்சாரம் கிடைப்பதில்லை. வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. மேலும், இது சம்பந்தமாக சென்னை முதல் தேனி வரை உள்ள அலுவலகங்களில் புகார் அளித்துள்ளோம். ஆனால், இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல், மின் கம்பங்களில் இருக்கக்கூடிய மரக்கிளைகளை அகற்றக் கோரி கேட்டாலும், ஊர் மக்களே அதை அகற்றுமாறு கூறுகின்றனர். இது சம்பந்தமான பணியாளர்களிடம் கேட்டாலும் அலட்சியமாக இருக்கின்றனர். இதன் விளைவாக கடந்த 20வது நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்'' என்று வேதனைத் தெரிவித்தார்.

மேலும், ''எங்கள் பகுதிகளில் உள்ள படித்தவர்களையோ அல்லது அனுபவம் மிக்கவர்களையோ பணியில் நியமித்தால் எங்களுக்கு ஏதுவாக இருக்கும்'' என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தார். அதேபோல், இதுபோன்ற சிக்கல்களை அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமங்களுக்குத் தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி வகை செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:பரிசுப் பொருள் அனுப்பியதாகக் கூறி 1.22 லட்சம் மோசடி; நட்பாகப் பழகி கைவரிசை காட்டும் நைஜீரிய கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details