தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி வராக நதிக்கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை! - வராக நதிக்கரை

தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரைப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் அறிவித்துள்ளார்.

theni varaha river flood alert

By

Published : Oct 30, 2019, 4:49 PM IST

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தற்போது தீவிரமடைந்துவருகின்றது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நேற்றிரவு முதல் மழை வெளுத்துவாங்குகிறது.

இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள சோத்துப்பாறை அணை, கல்லாறு, அகமலை உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

தேனி வராக நதியில் வெள்ளப்பெருக்கு

126 அடி உயரம் கொண்ட சோத்துப்பறை அணை ஏற்கனவே நிரம்பி வழிகின்ற நிலையில், தற்போதுள்ள நீர்வரத்தான 888 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதேபோல கும்பக்கரை அருவி, கல்லாறு, செலும்பாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்பட்ட நீர்வரத்தால், பெரியகுளம் நகரின் மத்தியில் செல்லக்கூடிய வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.

இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட வராக நதியின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வராக நதியில் அதிகளவு தண்ணீர் செல்வதால், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

ABOUT THE AUTHOR

...view details