தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2019, 11:36 AM IST

ETV Bharat / state

ஜனநாயகம் செழித்தோங்க வாக்களித்தேன்: மூதாட்டி நெகிழ்ச்சி!

தேனி: ஆண்டிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த மூதாட்டி ஒருவர் ஜனநாயகம் செழித்தோங்கவே வாக்களித்துள்ளேன் என்று நெகிழ்ந்துள்ளார்.

தேனி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு  உள்ளாட்சித் தேர்தல்  தேனி கடமலை மயிலை தொகுதி வாக்குப்பதிவு  theni vote pollling  senior citizen caste their vote in theni local body election
தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டிகள்

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கடமலை - மயிலை ஆகிய இரு ஒன்றியங்களில் 285 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 96 ஆயிரத்து 950 வாக்காளர்களும், கடமலை - மயிலை ஒன்றியத்தில் 64,193 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

2000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டிகள்

வயதான முதியவர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். ஜெயசீலி என்ற 80 வயது மூதாட்டி வாக்களித்தது குறித்து பேசும்போது, ஜனநாயகம் செழித்து ஓங்கவே நான் வாக்களித்தேன் என்றும், நடப்பதற்கு சிரமப்பட்டாலும் பிறரின் துணையோடு வந்து எனது ஜனநாயகக்கடமையை ஆற்றியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் முறையாக நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details