தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி வார்டு பதவிக்கு குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு! - Theni Select men in shaking mode

தேனி: ஶ்ரீரெங்கபுரம் கிராமத்தில் ஊராட்சி வார்டு பதவிக்கு குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

theni-select-men-in-shaking-mode
theni-select-men-in-shaking-mode

By

Published : Dec 13, 2019, 10:11 PM IST

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ளது ஶ்ரீரெங்கபுரம் கிராமம். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்தக் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட இந்தக் கிராம ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன. இவற்றில் ஒரு வார்டு, ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் இன்று ஊர் நடுவே இருக்கும் சமுதாய திருமண மண்டபத்தில் ஒன்றுகூடி எட்டு பொது வார்டுகளின் உறுப்பினர் பதவிக்கு யார் யாரை தேர்ந்தெடுப்பது எனப் பேசியுள்ளனர். முடிவில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெயர்களை துண்டு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஊராட்சி வார்டு பதவிக்கு குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு

இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் இதுபோன்று ஒரு சிலருக்கு வேண்டியவர்கள் உறுப்பினர்களாக வர வேண்டும் என்று இந்தக் குலுக்கல் முறையை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஜனநாயக முறைப்படி மக்களை சந்தித்து வாக்குச்சீட்டின் அடிப்படையில் வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம் என்கிறார்கள்.

அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறும்போது

இதையும் படிங்க:

'அரசுப்பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி' - 5 ஆண்டுகள் கழித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details