தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் கோயில் நகைகள் திருட்டு - 3 பேர் கைது - தேனி கிரைம் செய்திகள்

தேனி: பெரியகுளம் அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் திருடிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோயில் நகைகள் திருட்டு
கோயில் நகைகள் திருட்டு

By

Published : Feb 14, 2021, 3:44 PM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெருமாள்புரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் கடந்த 5ஆம் தேதி, இரவு பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்க நகை, அரை கிராம் வைர மூக்குத்தி, ஐம்பொன் முகக்கவச சிலை, வெள்ளிக் கொலுசு மற்றும் உண்டியலில் இருந்த பணம் ரூபாய் 30,000 என சுமார் 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டுப்போனது.

இதுதொடர்பாக கோயில் பூசாரி முருகன் அளித்தப்புகாரில்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் கோயிலில் திருடப்பட்ட உண்டியல் பெருமாள்புரம் மயானக்கரை அருகே கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் கும்பக்கரை அருவி சாலையில் இன்று(பிப்ரவரி 14) ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமான முறையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை விசாரித்தனர்.‌

விசாரணையில் அவர்கள், பெரியகுளம்-வடகரையைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் டேவிட் பிரசாத் ஆகியோர் என்றும், இவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனே காவல் துறையினர் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட அம்மன் நகைகள், கொலுசு மற்றும் உண்டியல் பணத்திலிருந்த 17,000 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் பெரியகுளம் சார்பு நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:வீட்டில் குழி தோண்டி பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details