தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சி, ஒன்பது வார்டுகளைக் கொண்டு 4727 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த ஊராட்சிக்கு வரும் 30ஆம் தேதி இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனநாயகம் காப்போம் குழுவினர் ஓட்டுக்குப் பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வீடுகள்தோறும் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் திண்ணை பரப்புரயை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை இக்குழுவினர் வீடுகள்தோறும் ஒட்டிவருகின்றனர்.