தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா - கன்னியா பூஜை

தேனி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு கன்னியா பூஜை சிறப்பாக நடைபெற்றது.

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா - கன்னியா பூஜை
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா - கன்னியா பூஜை

By

Published : Jul 26, 2022, 7:28 AM IST

தேனி : பங்களா மேடு பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீனாட்சி அம்மனுக்கு கன்னியா பூஜை சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கன்னியா பூஜைக்காக மீனாட்சி அம்மனுக்கு வண்ண பட்டுத்தி சிறப்பு அலங்காரத்துடன் காட்சி தந்தார். பின்னர் கண்ணிய பூஜைக்காக அம்மன் குழந்தை பருவத்தில் இருப்பது போல் சிறுமிகளுக்கு பூஜைகள் செய்து மாலைகள் அணிந்து பக்தர்கள் வணங்கி சிறப்புகள் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பிரகார உலாவிற்கு தயாரான மீனாட்சியம்மனுக்கு மேல தாளங்களுடன் குழந்தை பருவமான மீனாட்சி அம்மனாக பாவித்து சிறுமிகள் முன்னே செல்ல மீனாட்சி அம்மனை பெண்கள் தங்கள் தோளினில் பல்லாக்கு தூக்கி சென்று பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

பின்னர் மீனாட்சி அம்மனுக்கு தீபாரதனை காட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் மீனாட்சியம்மனை தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 ஆவது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு தீவரம்

ABOUT THE AUTHOR

...view details