மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த திவ்யா (20) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் அமைந்துள்ள அரசு செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் விடுதியில் மாணவி நீண்ட நேரமாகியும் அறையை திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அறைக்கதவை தட்டிப்பார்த்தனர். அப்போதும் திறக்காததால், விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். விடுதி காப்பாளர் கல்லூரி நிர்வாகம், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து பார்க்கையில் மாணவி திவ்யா மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.