தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் சாவு! - கண்டமனுார் வனப்பகுதி

தேனி: கண்டமனுார் வனப்பகுதியிலிருந்து  அருகில் உள்ள பாலூத்து கிராமத்துக்கு தண்ணீரைத் தேடிவந்த புள்ளிமான் ஒன்று அருகே பயன்பாடில்லாமல் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.

deer

By

Published : Feb 6, 2019, 3:13 PM IST

தேனி மாவட்டத்தில் கண்டமனூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனச்சரகத்திற்கு உட்டபட்ட கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமம் உள்ளது. வனப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி புள்ளிமான் ஒன்று, பாலூத்து கிராமத்திற்கு வந்துள்ளது.

தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்த புள்ளிமான், அந்தப் பகுதியில் பயன்பாடில்லாத விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த கண்டமனுார் வனத் துறையினர் புள்ளிமானை மீட்கக் கிணற்றில் இறங்க முயன்றனர்.

ஆனால், கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமான் ஏற்கனவே இறந்துவிட்டதால், அதன் உடலை கயிறு மூலம் தூக்கி மேலே கொண்டு வந்தனர்.

இதையடுத்து கால்நடை மருத்துவர்களால் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதிக்குள் புதைக்கப்பட்டது.

கோடைகாலம் நெருங்குவதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு வனப்பகுதிக்குள் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details