தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி மகளிர் காவல் நிலையத்திற்கு மத்திய அரசு பாராட்டு - இந்தியாவில் 4ஆம் இடம் பிடித்த தேனி

தேனி: சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் 4ஆவது இடம் பிடித்த தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாராட்டுச் சான்றிதழை, தென் மண்டல ஐஜி முருகன் வழங்கினார்.

police
police

By

Published : Jul 14, 2020, 8:37 AM IST

நாடு முழுவதுமுள்ள 15 ஆயிரத்து 579 காவல் நிலையங்களில் சிறப்பாக செயல்பட்ட முதல் 10 காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் பாராட்டி வருகிறது. அதன்படி, 2017 – 18ஆம் ஆண்டிற்கான தேர்வு பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4ஆவது இடமும், தமிழ்நாடு அளவில் முதலிடமும் பிடித்தது.

இதற்கான அறிவிப்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. காவல் நிலையத்தின் தூய்மை, புகாரளிக்க வரும் பொதுமக்களிடம் காவலர்களின் அணுகுமுறை, புகாருக்கான தீர்வு, மாற்றுத்திறனாளிக்கான வசதி, சுத்தமான குடிநீர் மற்றும் முறையாக பராமரிக்கப்படும் கோப்புகள் என்ற முறையில் பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு, அனைத்தையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில், மத்திய அரசு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பாராட்டி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வரப்பெற்ற பாராட்டுச் சான்றிதழை, தென்மண்டல காவல் துறை தலைவர் முருகன், தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர் திலகத்திடம் வழங்கினார்.

இதையும் படிங்க:பாலிவுட் நடிகரை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details